தமிழகத்தில் ரேஷன் அட்டையில் திருமணம் ஆன மகன் மற்றும் மகள் பெயர் இருப்பின் அவர்கள் புதிதாக அட்டை வாங்க ஏதுவாக பெயர் நீக்கப்படும். ஏற்கனவே காலமான நபரின் பெயர் இருந்தால் அவரின் பெயர் நீக்கப்படுவது அவசியம். இதற்கு சில நடைமுறை அரசாங்கம்  பின்பற்றப்படுகிறது. தாலுகா அலுவலகம் சென்று உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து பெயரை நீக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்தும் ரேஷன் அட்டையில் பெயரை நீக்கலாம்.

அதற்கு முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பயனாளர்கள் நுழைவு என்று இருக்கும் இடத்தில் ரேஷன் அட்டைக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ குறிப்பிட்டு உள்ளே செல்ல வேண்டும். அப்படி சென்றால் உள்ளே சேவை தேர்வுகள் என்ற பகுதியில் குடும்ப உறுப்பினர் நீக்குக என்ற பிரிவை அழுத்தி பெயர் நீக்க காரணத்தை அதில் குறிப்பிட வேண்டும்.

திருமணம் ஆகி சென்ற மகன் மற்றும் மகள் என்றால் திருமண சான்று மற்றும் உயிரிழந்த பெற்றோர் என்றால் இறப்புச் சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து உறுதிப்படுத்துதல் என்பதையும் பதிவு செய்ய என்பதையும் அழுத்த வேண்டும். இதனை செய்து முடித்ததும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் ஆகிவிடும். இதனை நீங்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.