மனதைக் கவரும் வகையில், ஆனந்த் மகேந்திரா சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் டெல்லி தெருவோர வியாபாரி ஒருவர் ரூபாய் 50 க்கு முழு உணவையும் அதாவது வாடிக்கையாளர்கள் வயிறு நிரம்ப சாப்பிடும் அளவிற்கு குறைந்த விலையில் கொடுத்து வருகிறார்.

அந்த வீடியோ; விற்பனையாளரின் சிறிய ஹோட்டலில் , அங்கு அவர் தாராளமாக ‘தால் மக்கானி’ ‘ ‘ஷாஹி பனீர்,’ ‘பூண்டி ரைதா,’ மற்றும் இரண்டு முழு அளவிலான ‘நான்கள்,’ அனைத்தும் நம்பமுடியாத குறைந்த விலையில் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை ஆனந்த் மகேந்திரா சமூக வலைதள பக்கத்தில் , “பணவீக்க எதிர்ப்பு ஜார்ஜ்” ஆக இவரை நியமிக்க வேண்டும் என நகைச்சுவையாக பரிந்துரைத்துள்ளார். விலைவாசி உயர்ந்துள்ள இந்த காலகட்டத்திலும் குறைந்த விலையில் மக்களின் நலனுக்காக இவ்வாறு அளித்து வரும் சேவை மனப்பான்மையை பலரும் பல வகைகளில் தங்களது கருத்துகளை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

“>