‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், டி சீரிஸ் எம்.டியுமான பூஷன் குமாரின் மனைவி அனிதா கோஸ்லா வியாழக்கிழமை(நேற்று) காலமானார். இதை அவரது மகள் நடிகை திவ்யா கோஸ்லா இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். ‘அம்மா.. நீ என்னை விட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் என்றும் இருப்பாய்.

உங்களின் மகளாகப் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டி சீரிஸ் ரூ.500 கோடியில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ஆதிபுருஷ் படம் கலவையான வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சோனன், சைப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்தனர்.