ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் தபால் துறை வங்கியில் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் மூலமாக மாணவர்களின் ஆதார் மற்றும் கைபேசி எண்ணை பயன்படுத்தி ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.