ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதார் மூலமாக பல மோசடி கும்பல்கள் பணப்பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமல் அவருடைய ஆதாரை வைத்து வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதால் ஆதார் அட்டைதாரர்கள் தங்களுடைய பயோமெட்ரி விவரங்களை கட்டாயம் பதிவு செய்து அதை உடனடியாக லாக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.