இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஆதாரில் எத்தனை முறை விவரங்களை மாற்றலாம் என்று யாருக்கும் தெரிவதில்லை. அதாவது ஆதார் கார்டில் விவரங்களை மாற்றுவதற்கும் அல்லது அப்டேட் செய்வதற்கும் சில குறிப்பிட்ட வரம்பு உள்ளது.

அதன்படி ஆதாரில் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். முகவரியை மாற்றுவதற்கு எந்தவித லிமிட்டும் கிடையாது. ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மாற்ற முடியும். பாலின விவரங்களை ஒரு முறை மட்டுமே மாற்றலாம். ஆதாரில் புகைப்படத்தை எந்தவித லிமிட்டும் இல்லாமல் மாற்றிக் கொள்ள முடியும். அத்தியாவசிய தேவைகளுக்காக பிறந்த தேதி, பாலினம் மற்றும் பெயர் ஆகியவற்றை அப்டேட் செய்வதற்கு எக்செப்ஷன் ஹேண்ட்லிங் ப்ரோசீஜர் எனப்படும் சிறப்பு செயல் முறையை பயன்படுத்தலாம்.