இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது . தற்போது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது எஸ்பிஐ whatsapp பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மூலமாக அனைத்து தகவல்களையும் whatsapp மூலமாக பெற முடியும். இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் பலருக்கும் இது தற்போது வரை தெரியாமல் உள்ளது. வாட்ஸ் அப்பில் எந்தெந்த சேவைகளை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதில் உங்களுடைய வங்கி கணக்கு இருப்பை சரி பார்க்கலாம். சிறு அறிக்கை (10 பரிவர்த்தனைகள் வரை), கணக்கு அறிக்கை (250 பரிவர்த்தனைகள் வரை), வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன் வட்டிச் சான்றிதழ், ஓய்வூதிய சீட்டு சேவை, கடன் தொடர்பான தகவல் (வீட்டுக் கடன், கார் கடன், தங்கக் கடன் மற்றும் கல்விக் கடன்), அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகிய பல வசதிகள் இதில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் எஸ்பிஐயில் எந்த எண்ணைப் பதிவு செய்திருந்தாலும், அந்த எண்ணிலிருந்து WAREG ACCOUNT NUMBER என்று எழுதி +917208933148 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பஅதன் பிறகு உங்கள் மொபைலில் ஒரு செய்தி வரும். இந்த செய்தியின் மூலம் பதிவு உறுதிப்படுத்தப்பட்டதும், உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து 9022690226 என்ற எண்ணுக்கு ஹாய் என அனுப்ப வேண்டும். பிறகு உங்களின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.