இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் தனிப்பட்ட நபரின் அனைத்து வித ஆவணங்களும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மறுபக்கம் ஆதார் அட்டையை மோசடியாக பயன்படுத்தி ஒரு நபரை நினைத்து விவரங்களையும் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் அபகரிக்க முடியும் எனவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் ஒரு நபரின் ஆதார் அடையாள எண்ணை வைத்து இது போன்ற மோசடியில் யாரும் ஈடுபட முடியாது.

இது போன்ற மோசடிகளை தவிர்க்க பொதுமக்கள் வங்கி கணக்குடன் தங்களது முக ஐடி, பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற கூடுதல் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியம். இவை வங்கி கணக்குகளுக்கான கூடுதல் பாதுகாப்பாக செயல்படும் எனவும் உங்களது ஆதாரை பயன்படுத்தாத சமயங்களில் ஆதார் லாக்கிங் சிஸ்டம் மூலம் இவற்றை லாக் செய்வது மோசடி செயல்களில் இருந்து உங்கள் ஆதார் மற்றும் மற்ற ஆவணங்களின் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும் என அரசு தெரிவித்துள்ளது.