
ஆதார் என்பது தனிநபருக்கு மிக முக்கிய அடையாள ஆவணமாகும். இப்பொழுது எங்கு பார்த்தாலும் ஆதார் எண் தான் அவசியமாகிறது. வங்கி கணக்கு, ரேஷன் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களோடு ஆதாரை இணைப்பது அவசியம் ஆகிவிட்டது. இவை அனைத்திற்குமே ஆதார் அட்டை பயன்படுத்துவதால் அதை புதுப்பிப்பதும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் இவற்றை உரிய காலத்தில் புதுப்பிக்காவிட்டால் அதோடு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு, ரேஷன் கணக்கு உபயோகிப்பதில் நம்மளுக்கு சிரமம் ஏற்படலாம்.
எனவே ஆதாரை பத்து வருடத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும். இந்த நிலையில் தமிழக அரசு 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதாரப் புதுப்பிப்பது அவசியம் என்பதை உணர்த்துவதற்காக வரும் டிசம்பர் 12ம் தேதி வரை இலவசமாக இணையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ள.து மேலும் இ-சேவை மையம், தாலுகா அலுவலக இ சேவை மையங்களில் ஆதார் அட்டை புதுப்பித்தல் மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல ஆதார் அட்டையில் முகவரி மாற்றம். தொலைபேசி எண் மாற்றம் போன்ற திருத்தத்தையும் மேற்கொள்ளலாம்.