மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 20 வயது இளம்பெண், நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு, இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சந்தன் மாலிக் மற்றும் தீப் என்ற இருவரும், அந்த இளம்பெண்ணுடன் நண்பர்களாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் தீப் என்பவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பின்னர் இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று, ரெஜண்ட் பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தீப்பின் வீட்டில் நன்றாக உணவளித்து, பின்னர் அவரது வீட்டிற்கு செல்லத் தயாரான அந்த இளம்பெண்ணை தடுத்து, இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது, சம்பவம் குறித்து மன அழுத்தத்தில் உள்ள அந்த இளம்பெண், சம்பவத்தின்பின் நேராக வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை அழுகையுடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சந்தன் மாலிக் மற்றும் தீப் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கொடூரமான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.