ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான செய்தியை சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைப் பெற்றார்.
ஆனால், ராம் சரணுக்கு வாரிசு உருவாக வேண்டும் என்ற நோக்கில் ஆண் குழந்தை பிறந்ததைத்தான் சிரஞ்சீவி அதிகம் கொண்டாடுகிறார் என்றும், மூத்த பேத்தி கிளின்காரா பிறந்தபோது அவர் இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை என்றும் ஒரு பத்திரிகையாளர் சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியது.இந்த விமர்சனத்திற்கு சிரஞ்சீவியின் மருமகள் லாவண்யா திரிபாதி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
“அவர் கால் தூசிக்குக் கூட ஈடாக மாட்டீர்கள்” ஒரு மகிழ்ச்சியான தருணத்தை இப்படி அசிங்கமான கருத்தின் மூலம் சங்கடமாக மாற்ற வேண்டாம் என எச்சரித்துள்ள அவர், சிரஞ்சீவி தனது குடும்பத்துப் பெண்களிடமும் பேத்திகளிடமும் காட்டும் அன்பும் மரியாதையும் ஈடுஇணையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பில் ஒரு சதவீதத்தை கூட மற்ற ஆண்களால் கொடுக்க முடியாது என்றும், தெரியாத விஷயங்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம் என்றும் அந்த பத்திரிகையாளருக்கு லாவண்யா பதிலடி கொடுத்துள்ளார்.
