தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் புற்றுநோயியல் அறுவை சிசிச்சை நிபுணர் டாக்டர் எஸ்விஎஸ் டியோ கூறியதாவது, இந்தியாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வருடந்தோறும் 13 -14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதித்து வருகிறது.

2026-ல் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சத்தைத் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புற்றுநோய் தொடர்பாக உள்ள பெரும்பாலான மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.