ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த உத்தரவை எங்களை எதிர்த்தவர்களுக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அடுத்த முடிவை எடுப்போம். ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப் போவதில்லை. இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.