
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 3,49,697 பேரும், மாணவிகள் 4,05,753 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகளை http://tnresults.tn.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.