காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலை வாய்ப்புக்கான காலண்டர் வெளியிடப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தெலுங்கானாவில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பி ஆர் எஸ் அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. ஆசிபாபாத் மக்களுக்கு பிஆர்எஸ் ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 2 லட்சம் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.