தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது “கங்குவா” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் 38 மொழிகளில் வெளியாகியுள்ளதுடன் இதில் நடிகர் சூர்யா 7 வேடங்களில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவக்குமார் மகனான சூர்யாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு விருப்பம் இல்லையாம். அதனால் அவர் நடிகர் சிவகுமாரின் மகன் என்பதை மறைத்துவிட்டு திருப்பூரிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 6 மாதங்களுக்கு வேலை பார்த்துள்ளார். அதன்பின் அவர் 1997 ஆம் ஆண்டு “நேருக்கு நேர்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதைதொடர்ந்து அவர் பல வெற்றி படங்களை நடித்துள்ளார். பின் 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது அவர் “சூர்யா 44” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
