தென்காசி மாவட்டத்திலுள்ள ஆல்வான் துலுக்கப்பட்டி அண்ணா நகரில் ஆசை தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார். அதன் பிறகு அந்த நோட்டுகளை மருதம் நகரில் இருக்கும் காய்கறி கடையில் கொடுத்து காய்கறி வாங்கியுள்ளார். அந்த நோட்டை பார்த்தவுடன் கடைக்காரர் முகமது சபீருக்கு சந்தேகம் வந்தது. இது குறித்து கேட்டபோது ஆசைத்தம்பி முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

உடனே முகமது அவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் படித்து போலீசில் ஒப்படைத்தார். இதனை அடுத்து போலீசார் சோதனை நடத்திய போது ஆசை தம்பி வைத்திருந்த 25 100 ரூபாய் நோட்டுகளும் போலியானது என்பது தெரியவந்தது. இவர் கள்ள நோட்டுகளை பல்வேறு கடைகளில் கொடுத்து கடந்த 6 மாதமாக பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆசைத்தம்பியை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்