டெல்லியின் வடமேற்கு பகுதியை சேர்ந்த அசோக் விஹார் என்ற பெண் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தனது குழந்தையை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. காரணம் குழந்தையின் கழுத்தில் நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் விசாரணை மேற்கொளத் துவங்கினர். குழந்தையின் தாயிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் அவரே உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த பெண்ணின் கணவர் அவரையும் குழந்தையையும் தனியாக தவிக்க விட்டு சென்ற பிறகு இன்ஸ்டாகிராமில் ராகுல் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராகுலை திருமணம் செய்யும் நோக்கத்துடன் அந்த பெண் இருந்துள்ளார். ஆனால் ராகுல் குடும்பத்தினர் அந்த பெண்ணின் 5 வயது குழந்தையை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாயை கைது செய்துள்ளனர்.