
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் பாய்ந்து வரும் நதி உம்காட். இந்த நதிக்கரையில் மவுலினாங் என்னும் கிராமம் அமைந்துள்ளது. எனவே இந்த கிராமத்தில் உள்ள ஆறுகள் மிகவும் தூய்மையான ஆறாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமமாக இருந்து வருகிறது.
இந்த கிராமம் 100% கல்வியறிவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உம்காட் நதிதான் ஆசியாவிலேயே மிகவும் தூய்மையான நதி என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த நதியின் 10 அடி ஆழத்தில் உள்ள பாறைகள், ஓடும் மீன்கள் என அனைத்தும் தெளிவாகத் தெரியுமாம். நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, இந்த நதியை பார்ப்பதற்கு உகந்த காலம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
View this post on Instagram
.