நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கை 12 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானை நேரில் ஆஜராக வேண்டும் வளசரவாக்கம் போலீசார் சம்மன் ஒட்ட சென்றனர். அப்போது சீமான் வீட்டு காவலாளிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக சீமான் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசும் நிலையில் நடிகை பாலியல் புகார் வழக்கிலும் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கில் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீமான் ஆங்கிலத்தில் பேசும் ஒரு ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் புஷ்பா படம் பற்றி ஆங்கிலத்தில் பேசுகிறார் .மேலும் இந்த ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.