கொலம்பியாவில் நடந்த காளை சண்டை விழா பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக நடத்தப்படும் ‘கொரலேஜா’ திருவிழாவின் போது, 35 வயதான காளை சண்டை வீரர் யோவானிஸ் மார்க்வெஸ் , காளையின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தார்.
அரங்கில் சாகசம் செய்ய முயன்ற மார்க்வெஸை, காளை திடீரென கொம்பால் கழுத்தில் தாக்கியது. கடுமையான காயத்துடன் அவர் எழுந்து உதவிக்காக ஓடியும், சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், மார்க்வெஸ் காளையைத் தூண்டுவதும், பின்னர் சாகசம் செய்ய குதிப்பதும், அதற்குப் பிறகு காளை கொம்பால் தாக்கும் தருணமும் தெளிவாக தெரிகிறது.
MUERE JOVEN TRAS SER CORNEADO EN FESTIVIDAD EN COLOMBIA
— Un trágico accidente ocurrió en las corralejas de Fundación, Magdalena, Colombia, cuando Yovanny Romo, conocido como “El Bala”, intentó esquivar a un toro durante las festividades. El joven no logró evitar al animal y fue… pic.twitter.com/SfZPOWpHSo— El Blog del Narco (@narcoblogger) August 10, 2025
“>
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ஓ கடவுளே, மனித முட்டாள்தனத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்”, “வாழ்க்கை விலைமதிப்பற்றது, அதை ஆபத்தில் விடாதீர்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “காளை தவறில்லை, ஆபத்தான சாகசமே காரணம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ உலகம் முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
