ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10.20 மணி, பகல் ஒரு மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு அதனைப் போலவே மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 10.50, பகல் 1.30 மற்றும் பிற்பகல் 3.20 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
