சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஜோ ரூஸோ சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவெஞ்சர்ஸ் மாதிரி படத்தில் இந்தியாவில் உள்ள நடிகர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்? என்று கேட்டதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் அவர் ரஜினி என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரஜினி என்னுடைய படத்தில் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்றும் அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஜோ ரூஸோ தெரிவித்துள்ளார்.