பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்டமாக, ரசிகர் ஒருவர் ஒரு மௌல்வியிடம் சென்று, “பாபர் அசாமை அணியில் இருந்து நீக்க ஏதாவது வழி சொல்லுங்கள்” என்று உருக்கமாகக் கோரிக்கை வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கிரிக்கெட் வீரரின் ஆட்டத்திறன் குறித்து மத குருவிடம் தீர்வு கேட்பது விசித்திரமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தாலும், அந்நாட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு விரக்தியில் உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இந்த வீடியோவில், அந்த மௌல்வி மிகவும் நிதானமாகப் பதிலளிக்கும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. “அவர் சிறப்பாக விளையாடினால் அணியில் இருப்பார், இல்லையென்றால் நீக்கப்படுவார் இதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்பது போன்ற எதார்த்தமான பதிலை அவர் வழங்கியுள்ளார்.
View this post on Instagram
“>
மேலும் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஒருவரைப் பற்றி இவ்வளவு வேடிக்கையான விவாதங்கள் நடப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. விளையாட்டுப் பிரச்சனைகளுக்குக் கூட ஆன்மீகத் தீர்வைத் தேடும் ரசிகர்களின் இத்தகைய செயல்கள், கிரிக்கெட் மீதான அவர்களின் தீவிரமான சில நேரங்களில் விசித்திரமான காதலையே வெளிப்படுத்துகின்றன.
