
விசிக தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை.
உண்மையாகவே அவர் பெரியாரை ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் திமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் நீங்கள் அந்த கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், இது ஒரு யூகமான கேள்வி என்றும், அது நடந்தால் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.