திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அக்காள் தங்க இருவரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலியல் ரீதியாக மாணவிகள் துன்புறுத்தப்பட்டிருப்பதை கூறியுள்ளனர். இதனால் அக்காள் தங்க இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில் திடக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கேசவன்(23) வெல்டிங் வேலை பார்க்கும் அஜித்(20) ஆகிய இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமிகள் கூறியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித்தையும் கேசவனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.