
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் காட்டூர் அன்னவாசலைச் சேர்ந்த 9 வயது சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழகுத் தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கருணாநிதி பற்றி கவிதை படித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
தமிழினத் தலைவர் கலைஞர் நினைவு நாளில் மழலைத் தமிழ்க் கவிதையால் நெஞ்சம் நிறைந்தது…#கலைஞர்100 #என்றென்றும்கலைஞர் #KalaignarForever pic.twitter.com/oVldTrBIzy
— M.K.Stalin (@mkstalin) August 7, 2023