தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, தென்காசி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.