தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்றும் திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் திமுக மீது விமர்சனங்கள் வைத்த நிலையில் அந்த கட்சிதான் தங்களுடைய முதல் அரசியல் எதிரி என்று கூறினார். அதன் பிறகு நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தில் செயற்குழு கூட்டத்திலும் தமிழக அரசுக்கு கன்னடம் தெரிவித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில் அவர் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திமுகவை எதிர்ப்பதற்காகவும் விமர்சிப்பதற்காகவும் விஜய் கட்சி தொடங்கியது போல் இருக்கிறது. திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் கட்சி தொடங்கியுள்ளார். விஜய் அறிவித்துள்ள கொள்கைகளை பார்க்கும்போது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்பது போல் தோன்றுகிறது. அவர் தொடர்ந்து இப்படியே செய்து கொண்டால் மாவு வீணாகி விடும் என்று கூறினார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு தொல் திருமாவளவன் தான் அந்த கட்சியின் தலைவர் என்றும் இந்த கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.