கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில் இன்னும் அதற்கான சாத்தியமில்லை என்றார். பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்றபடி செயல்படுத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இருக்கும் சாதக பாதகங்களை ஒரு அரசியல் கட்சி யோசித்து பார்க்க வேண்டுமே தவிர எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாமும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கக் கூடாது. ஒரு அரசியல் கட்சி ஒரு விஷயத்தை கூறுகிறது என்றால் அதையே விஜய்யும் கூற வேண்டிய அவசியம் கிடையாது. விஜய் அதைப்பற்றி ஸ்டடி பண்ண வேண்டும் வேண்டும் என்று கூறினார். மேலும் அமரன் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றும் அந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
