தமிழகத்தில் தகுதி பெற்ற மாணவர்களை மாதிரி பள்ளிகளில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி, நூல்களை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி சென்னை, அரியலூர், மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக உண்டு மற்றும் உறைவிட வசதிகளுடன் கூடிய 40 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்ட இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளில் தற்போது பிளஸ்-1 வகுப்பில் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவில் சேர தகுதி பெற்ற மாணவர்களின் விவரம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாதிரி பள்ளிகளில் வருகின்ற ஜூன் 21ஆம் தேதிக்குள் சேர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.