உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோட்த்வார் பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குள்ள பிரசவ வார்டில் ஒரு நபர் தனியாக நின்று கொண்டிருந்தார். அங்கு பெண் நோயாளிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் செவிலியர் ஒருவரை பார்த்தவுடன் அந்த நபர் திடீரென சுய இன்பம் செய்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைப் பெண் நோயாளி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.