இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பலவகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு மதிய உணவுடன் ராகி மால்ட்டை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களின் உணவில் ஊட்டச்சத்து மதிப்புகளை மேம்படுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 3000 கர்நாடக பொதுப்பள்ளியில் கட்டடம் மேம்படுத்தப்படும் என்றும் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.