இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கிக்கு நாடு முழுவதும் கோடி கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ வங்கியின் மூலமாக பல்வேறு சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் எஸ்பிஐ தன்னுடைய யோனா செயலி மூலமாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் யோனா ஆப் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வந்துள்ளது .அதாவது சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் விரைவில் தன்னுடைய யோனா ஆப் செயலின் சேவையை தொடங்க எஸ்பிஐ திட்டமிட்டு இருக்கிறது.

இதற்கு யோனா குளோபல் என்ற செயலியின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படும். அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பணம் அனுப்புதல் மற்றும் பிற சேவைகள் வழங்கப்படும். சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வணிகத்தை விரிவுபடுத்தும் . இந்த சேவை ஏற்கனவே பல நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.