நாட்டில் மத்திய அரசின் இணை செயலாளர்கள், இயக்குனர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்தது. இந்த பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நிலையில் நேரடியாக பணி நியமனம் செய்யலாம் என்று அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது லேடரல் என்ட்ரி முறை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் 45 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கலாம் என்று அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியதால் தற்போது மத்திய அரசு அந்த உத்தரவை ரத்து செய்யும்படி யுபிஎஸ்சி தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் மத்திய அரசு இந்த நேரடி பணி நியமன முறையை ரத்து செய்வதாக அறிவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.