சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்ற நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன், என் தொகுதியில் இருக்கின்ற பஞ்சமி நிலங்களை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது. அரசு நிலங்கள் அனைத்தையும் மீட்டு வேளாண் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி வதந்திதான். திருப்பரங்குன்றத்தில் இருதரப்பு மக்களுக்குமே வழிபாட்டு உரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. வன்னியர் சமூகத்தின் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய 21 போராளிகளுக்கு மண்டபங்கள் கட்டியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். சில தமிழர்கள் சார்ந்த பிரச்சனைகளை விரிவாக பேசுவதற்கு முதல்வரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது என வேல்முருகன் பேசியுள்ளார்.