மத்தியப்பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளித்து வரும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளார். இதன் வாயிலாக அம்மாநிலத்தை சேர்ந்த ஏழரை லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். மத்திய-மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இப்போது 4% வித்தியாசம் இருப்பதால், அது ரத்து செய்யப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். ​​

2023 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய விகிதத்தின் கீழ் 38% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் சவுகானின் இந்த அறிவிப்புக்கு பின்  அகவிலைப்படி 42% ஆக இருக்கும். அதோடு அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டவுடன் அகவீலைப்படியின் 50 சதவீதத்துக்கான தொகை அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு ரூ.18 ஆயிரம் அடிப்படை சம்பளமாக இருந்தால், அகவிலைப்படி உயர்வு கிடைத்தவுடன் அது ரூ.27 ஆயிரமாக அதிகரிக்கும்.