இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு தடை செய்யப்பட்டிருந்தது.. நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய வருகையை கையேட்டின் மூலமாக பதிவு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் வருகைப் பதிவு மாற்றங்களை செய்ய கோவாவின் மார்க்கோவ் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் செயல் திறன் மேம்படுத்தப்படும் என்றும் வருகை விதிகள் அமல்படுத்தவும் ஒழுக்கத்தை பராமரிக்கவும் முடியும் என அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் வருகை பதிவுக்கான முக அடையாளம் காணும் அமைப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் முனிசிபல் சந்தைகள், தோட்டங்கள் மற்றும் கேரேஜ்களில் பணியாற்றும் ஆப்சைடு ஊழியர்களுக்கு இந்த வசதி விரிவு படுத்தப்பட உள்ளது. அதனைப் போலவே எம் எம் சி தனது ஊழியர்கள் அலுவலக நேரத்தில் சீருடை அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. சீருடை அணிய தவறும் ஊழியர்களின் சீருடை அளவில் பிடித்தம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.