அன்னபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள ரேஷன் கடைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அரசு உதவியுடன் புதிய ரேஷன் கடைகளை திறக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த கணினி அறிவு உள்ள உள்ளூர்காரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் உணவுத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் உரிய அங்கீகாரம் சான்றிதழ்களை பெறலாம். அதன் பிறகு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஆரம்பத்தில் சிறிய முதலீடு தேவைப்பட்டாலும் நல்ல லாபம் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.