இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு துறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அரசு அலுவலகங்களில் பரிவர்த்தனைகளுக்கு UPI அமைப்புகளை ஏற்றுக்கொள்ள கேரள நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது கருவூலங்கள் மற்றும் அக்ஷய கேந்திராக்களில் மின் ரசீதுகள் மூலமாக பணம் செலுத்தப்படுகின்றது. புதிய முயற்சி மூலமாக தனிநபர்கள் கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யுபிஐ தலங்களை பயன்படுத்தி அரசாங்க அலுவலகங்களில் க்யூ ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.