தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடன் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான நோட்டு புத்தகங்கள், புத்தகபை, சீருடை, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் கடந்த கல்வி ஆண்டின் தாமதமாக கொடுக்கப்பட்டது.

நடப்பு கல்வி ஆண்டில் விரைந்து கொடுக்கப்பட்டாலும் பற்றாக்குறையின் காரணமாக பாதி மாணவர்களுக்கு இன்னும் பொருட்கள் வந்து சேரவில்லை. மேலும் சில மாணவர்களுக்கு ஒரு சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளுக்கு புத்தகப்பை மற்றும் செருப்பு இல்லாததால் மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் வாங்கி கொடுக்குமாறு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறிய அதிகாரிகள் பொருட்களுடைய தரம் குறைவு காரணமாக உற்பத்தியாளர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனால் காலதாமதம் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.