இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து விட்டது .விபத்தில் மூளைச்சவடைந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக உடலில் கல்லீரல் , கணையம் போன்றவற்றை தானம் செய்யும் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கடந்த 2008 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 9 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பல மடங்கு உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் நாட்டிலேயே தமிழகத்தில் மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பு தானம் பெற்று இதுவரை 10003 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.