மூத்த அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிகள் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போல தமிழ்நாடு இளைய விஞ்ஞானிகள் விருதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது அழிப்பது குறித்து சென்னையில் உள்ள அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூகத்தில் அறிவியல் ஆசிரியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களுடைய அறிவை வடிவமைப்பதில், அறிவியல் கற்ற மீதான ஆர்வத்தை வளர்ப்பது உள்ளிட்டவர்களுக்கு அறிவியல் ஆசிரியர்கள் தான் அச்சரமாக விளங்கி வருகிறார்கள்.

இவ்வாறு அறிவியல் ஆசிரியர்களை இந்த விலைமதிப்பற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2018 வருடம் முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது அறிவியல் நகரம் வழங்கி வருகிறது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்க பரிசை காசோலையாகவும், சான்றிதழும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவர்கள் திறந்த நிலை பிரிவில் அதாவது தமிழ் எழுது ஆங்கில வழியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அறிவியல் நகரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.sciencecitychennai.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14.