தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலைகள் திருப்திஅளிப்பதாக இல்லை  என்று  தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சமீபத்திய அதிமுக, அமமுக மற்றும் பிற கட்சிகளின் அரசியல் மாற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையைக்  அரசியல் தலைவர்கள் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், “டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒருமித்த கருத்தோடு தான் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் கட்டாயம் நமக்கு உள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.