பாஜகவிலிருந்து விலகிய பின் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துச் சமூக வலைதள நேரலையில் பேசிய அண்ணாமலை, கோவையை மையமாகக் கொண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ‘அப்துல் கலாம்’ அவர்களின் பெயரில் ஒரு பிரம்மாண்டமான அரசியல் பயிற்சி மையம் செயல்படத் தொடங்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இனி நம்முடைய அமைப்பில், உரிய அரசியல் பயிற்சியைப் பெற்ற பின்னரே தேர்தலைச் சந்திக்கும் வகையில் வேட்பாளர்கள் முழுமையாக வடிவமைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சும்மா வந்து தேர்தலில் நிற்பது அரசியல் கிடையாது என்றும், அரசியல் என்பது சர்க்கஸ் கிடையாது என்றும் சாடிய அவர், நாம் மாறினால் இந்த சமூகத்தில் மாற்றம் என்பது தானாகவே நடக்கும் என்று மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். மேலும், நம்முடைய இந்த புதிய அரசியல் பாதையில் யார் மீதும் எந்தவித வன்மமும் கிடையாது என்று அண்ணாமலை தனது அடுத்தகட்ட அதிரடி வியூகத்தை ஓப்பனாக உடைத்துள்ளார்.
