கரூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், கடந்த ஆண்டு தவெக மாநாட்டுப் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் காம்பாஸநேட் அரசு வேலைவாய்ப்பு ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அப்போது அந்த சோகமான சம்பவத்தை நினைவு கூர்ந்து, தவெக சார்பில் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

​அவர் பேசுகையில், “என் மனதை விட்டு கரூர் எப்பவும் நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சதி மற்றும் சூழ்ச்சியை இனிவரும் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக, இனிவொரு அரசியல் சதியை, அரசியல் சூழ்ச்சியை யாரும் யோசிக்கவே கூடாது என்பதற்காக கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பில் அமைக்கப்படும்” என்று முதலமைச்சர் விஜய் மிக உருக்கமாகவும், அதே சமயம் ஆவேசமாகவும் அறிவித்தார்.