தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சமீபத்தில் முறிந்தது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை, இதேபோல 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள நிலையில் அண்ணாமலை பதவி விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை, அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை, இருக்க வேண்டும் என்று இருக்கிறேன், என்னை விட்டு விட்டால் தோட்டத்திற்கு சென்ற விவசாயம் பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.