பிரான்ஸ் நான்டெஸ் ரயில் நிலையத்தில் டேவிட் என்பவர் செல்போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரயில்வே அதிகாரி ஒருவர் டேவிட்டை கண்டித்துள்ளார். ஆனால் டேவிட் ரயில்வே அதிகாரி தன்னை கிண்டல் செய்வதாக நினைத்து அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ரயில்வே அதிகாரி டேவிட்டுக்கு அபராதம் விதித்தார். டேவிட் அபராத தொகையை செலுத்த தாமதம் ஆனதால் அவரிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டேவிட்டிடம் இருந்து சுமார் 16 ஆயிரம் ரூபாய் பணத்திருக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.