நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் தனக்கென்று வைத்துள்ளார். இவர் சினிமாவில் இதுவரை 60 படங்கள் வரை நடித்திருக்கிறார் .அஜித் நடிப்பதில்  மட்டுமல்லாமல் கார் பந்தயம், பைக் ஓட்டுதல், விமானம் கட்டுதல் போன்றவற்றிலும் தன்னுடைய ஆர்வத்தை காட்டி வருகிறார். இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டு இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்கள் அஜித்தின் மகனான ஆத்விக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அதேபோல இந்த வாரம் அஜித்தின் மகள் அனோஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அம்மா ஷாலினியை போலவே இருக்கிறாரே என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.