தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியில், தன் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாயைப் மகளே காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சு தசாரி ராமையா (40) என்ற அந்தத் தாய், தனது 16 வயது மகளின் காதல் விவகாரத்தைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகள், தனது காதலன் மொன்டி குமார் சிங்குடன் சேர்ந்து கடந்த 2023 மே மாதம் தாயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்கத் திட்டமிட்ட இருவரும், வீட்டின் பெட்ரூம் தரையைத் தோண்டி சடலத்தைப் புதைத்து அதன் மேல் சிமெண்ட் பூசி மறைத்துள்ளனர்.

எவ்விதச் சலனமும் இன்றி அந்தப் பெண், தனது தாய் மாயமானதாகத் தானே போலீசில் புகார் அளித்ததுடன், அதே வீட்டில் புதைக்கப்பட்ட சடலத்தின் மீதே ஓராண்டாகத் தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் இந்த வழக்கைப் மீண்டும் கையில் எடுத்த போலீசார், அந்தப் பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமானது.

தற்போது பெட்ரூம் தரையைத் தோண்டி தாயின் எலும்புக்கூட்டை மீட்ட போலீசார், அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.